லண்டன்: காத்தான்குடி நலன்புரி ஐக்கிய இராச்சிய ஒன்றியத்தின் 3வது மாபெரும் ஒன்றுகூடல் நிகழ்வு 27-12-2016 லண்டன், Tooting நகர் ஜெஸ்மின் மண்டபத்தில் மிக விமர்சையாக இடம்பெற்றது. பகல் 1 மணியிலிருந்து பகல் போசணத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்வு இராப்போசணத்துடன் இரவு 11 மணியளவில் நிறைவடைந்தது.
ஐக்கிய இராச்சியத்தில் பரந்துவாழும் காத்தான்குடிவாழ் உறவுகள் தங்களது குடும்ப சகிதம் கலந்து சிறப்பித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் நோக்கில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

எமது நோக்கம் வருடத்தில் ஒரு முறையேனும் இவ்வாறான ஓர் ஒன்றுகூடல் நிகழ்வை ஏற்படுத்த வேண்டும் என்பதாக இருந்தபோதிலும், எமது சகோதர, சகோதரிகளின் அதிக ஆர்வத்தின் காரணமாக வருடத்தில் இருமுறையேனும் நடாத்துவதற்கு முடிவு செய்யப்பட்டு, அதன்படி இவ்வருடம் அல்லாஹ்வின் உதவியால் இருமுறை இந்நிகழ்வு சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஏற்பாட்டுக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.
வேலைப்பழுக்களுக்கு மத்தியில் இவ்வாறான பிரமாண்டமான ஓர் ஒன்றுகூடலை ஏற்பாடு செய்வது மிகவும் சிரமமான விடயமாக இருப்பதால், இந்நிகழ்வை ஏற்பாடு செய்வதற்கு அனைத்து சகோதரர்களும் தாங்களாக முன்வந்து இந்நிகழ்வுக்கு தங்களது உதவி ஒத்தாசைகளை வழங்க வேண்டும் எனவும் ஏற்பாட்டுக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.
இரு வேளை உணவுகளும் சுவையாக இருந்தன. இருந்த போதிலும், சிற்றுண்டிப்பண்டங்கள் அதாவது காத்தான்குடிக்கென்று தனிச் சிறப்பைப் பெற்ற சிற்றுண்டி வகைகளான சமூசா, கட்லட், ரோல்ஸ், இறைச்சி ரொட்டி மற்றும் வட்டிலப்பம் போன்ற சிற்றுண்டிகள் எதிர்வரும் நிகழ்வில் ஏற்பாட்டுக்குழுவினர் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும் என சமூகமளித்திருந்த பல சகோதர, சகோதரிகளின் கோரிக்கையாக இருந்தன.

சிறுவர், சிறுமியர்களின் மகிழ்ச்சியின் பிரதிபலங்கள் மண்டபத்தை அலங்கரித்தன.
இஸ்லாமியக் கீதங்களும் இசையில்லாமல் முழங்கின.
சிறுவர், பெரியோருக்கான ‘சங்கீதக் கதிரை’யும் இடம்பெற்றன.
சமூசாவும், காவாவும் இந்நிகழ்வின் கிளைமக்ஸ்!!

Leave a comment