“இன்னாலில்லாஹி..”, கோரவிபத்து: பெண் வைத்தியர் உட்பட மூவர் பலி

Accidentஇன்று அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்த்தில் பெண் வைத்தியர் மற்றும் அவரது உறவினர்கள் இருவர் பலியாகியுள்ளனர். ஏ9 வீதி மதவாச்சி, நாவற்குளம் பகுதியில் இடம்பெற்ற குறித்த விபத்தில், கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற கெப் ரக வாகனமும், யாழில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற கொள்கலன் லொறி (கன்டைனர்) ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதிலேயே இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.

புத்தளத்தில் வைத்தியராக பணியாற்றும் பெண் வைத்தியரான ரி.எம்.ஏ. சுதேசிகா என்பவரும் அவரது கணவரான முகமது சபுர் மற்றும் மாமாவான வவுனியாவின் பிரபல வர்த்தகரான சப்ரின் மற்றும் அவரது மனைவி மலீனா ஆகியோர் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்று கொண்டிருக்கையிலேயே அதிகாலை 5 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

Accident

இதன்போது வைத்தியர் மற்றும் அவரது 58 வயதுடடைய கணவரின் தந்தையான சப்ரின் 53 வயதுடைய கணவரின் தாயார் மலீனா சம்பவ இடத்தில் பலியாகியுள்ளனர்.வைத்தியரின் கணவர் முகமது சபுர் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ் விபத்து தொடர்பான விசாரணைகளை மதவாச்சி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Published by

Leave a comment