மும்பை: சமூக ஊடகங்களில், தனது மனைவியின் உடை குறித்து விமர்சனம் செய்தவர்களுக்கு இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி ஆவேசமாகப் பதிலளித்துள்ளார். ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரில் தனது மனைவியின் புகைப்படத்தை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டிருந்த ஷமி, `அழகான நேரங்கள்’ என வர்ணித்திருந்தார்.
இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் சிலர் கருத்து வெளியிட்டனர். அதில், இஸ்லாத்தைப் பின்பற்றுமாறும், அவரது மனைவி ஹிஜாப் மற்றும் நாகரீகமான உடை உடுத்துவதை உறுதிப்படுத்துமாறும் குறிப்பிட்டிருந்தனர்.
இதுகுறித்து, திங்கள்கிழமை கருத்து வெளியிட்டுள்ள முகமது ஷமி, “எனது குடும்பத்துக்கு என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்பது எனக்குத் தெரியும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment