-
பா. திருஞானம்
புஸ்ஸல்லாவ: கம்பளை கல்வி வலையத்திற்கு உட்பட்ட புஸ்ஸல்லாவ சரஸ்வதி மத்திய கல்லூரி மாணவ தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் விழா அன்மையில் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் அதிபர் எஸ்.சிவயோகன் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக கம்பளை கல்வி வலைய கோட்ட கல்வி பனிப்பாளர் திருமதி பி.துஸ்யந்தி அவர்கள் கலந்து கொண்டார். கௌரவ அதிதிகாளாக பிரபல வர்த்தகர் ஞானசேகரன்¸ புஸ்ஸல்லாவ பொலிஸ் நிலைய பொலிஸ் அதிகாரிகள்¸ கம்பளை கல்வி வலைய
ஆசிரிய ஆலோசகர்கள் உட்பட பெற்றோரகள்¸ ஆசிரியர்கள்¸ மாணவர்கள் கலந்துக் கொண்டார்கள் இதன் போது அதிதிகளின் உரைகளும் மாணவர்களுக்கான சின்னம் அனிவித்தலும் நடைபெற்றது.



Leave a comment