சுமணரத்ன பிணையில் விடுதலை

Ampitiye_Sumanarathana_thero batticaloaமட்டக்களப்பு: மட்டக்களப்பு ஸ்ரீ மங்களராம விகாராதிபதியும் கிழக்கு மாகாண பிரதி சங்கநாயக்கருமான அம்பிட்டியே சுமணரத்ன தேரரை பிணையில் விடுவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு விசாரணை இன்று (14) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்ற போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த தேரரை 50 ஆயிரம் ரூபா இரு சரீரப் பிணையில் விடுதலை செய்யுமாறும் மீண்டும் ஜனாவி 25ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Published by

Leave a comment