கருணாவின் பிணை மனு நிராகரிப்பு

Karunaகொழும்பு: கருணா அம்மான் என அழைக்கப்படும் முன்னாள் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் பிணை மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. தனது பதவிக் காலம் நிறைவடைந்த நிலையில், அரச வாகனத்தை மீள ஒப்படைக்கவில்லை எனும் குற்றச்சாட்டில் கடந்த நவம்பர் 29 ஆம் திகதி அவர் கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த விடயம் தொடர்பில் அவர், கடந்த வெள்ளிக்கிழமை (02) தாக்கல் செய்திருந்த பிணை மனு இன்று (05) கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிய முன்னிலையில் விசாரணைக்குட்படுத்தப்பட்டபோதே அவரது பிணை நிராகரிக்கபட்டமை குறிப்பிடத்தக்கது.

குறித்த வழக்கு எதிர்வரும் புதன்கிழமை (07) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

Published by

Leave a comment