-
AK-11
காத்தான்குடி: தமிழக முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர் விரைவில் மரணத்தைத் தழுவுவார் என எதிர்பார்த்து, “நானா-நீயா” என்று முகநூலிலும் “வட்ஸ்அப்” குழுக்களிலும் ஆளாளுக்கு முந்திக்கொண்டு பொய்ச் செய்திகளையும், மரணச் செய்தியையும் அறிவிப்பதில் எம்மவர்களுக்கு இருக்கும் ஆர்வம் அப்பாடா…..!
இந்த ஆர்வத்தை மார்க்க விடயங்களில் அல்லது தனது குடும்ப உழைப்பு விடயங்களில் செலவு செய்தால் எமது சமூகம் எங்கேயோ சென்றுவிடும்.
நேற்று காலையிலிருந்து நள்ளிரவு வரை ஜெயலலிதாவின் செய்தியை நிமிடத்துக்கு நிமிடம் அறிவிப்புச் செய்த முகநூல் சகோதரர்களும், “வட்ஸ்அப் குழு”மங்களும் எதைச் சாதித்தார்களோ தெரியவில்லை.
ஜெயலலிதா மரணமான செய்தி அதிகாலையிலேயே எமக்குத் தெரிய வந்த போதிலும், ஜெயலலிதாவின் மரணச் செய்தியை முகநூலில் பதிவேற்றக் கண்விழித்து முகநூலில் காத்திருந்த எமது சகோதரர்களின் ஆர்வங்கள் உண்மையில் எம்மை வியக்கவைக்கிறது.
“தஹஜ்ஜத்” தொழுகை, “ஃபஜ்ர்” தொழுகைக்குக் கூட விழித்திராத கண்கள் ஜெயலலிதாவின் மரணச் செய்தியை முந்திக்கொண்டு பகிர்ந்துகொள்வதில் விழித்திருக்கின்றன.
இதைவிட இன்னும் யோசிக்கத் தோன்றுகிறது…. ‘நான் அப்பலோவிலிருந்துதான் பதிவேற்றுகிறேன்’ என்று நம்மவங்க யாராவது ஸ்டேடஸ் போட்டிருப்பார்களோ … என்று!!AK-11


Leave a comment