“அரசியல் வாதிகள் பிழை விடும் சந்தர்ப்பத்தில் மிம்பர் மேடையை பயன்படுத்தி குறைகளை சுட்டிக்காட்டுங்கள்”- ஷிப்லி

  • எம் எச் எம் அன்வர்

jammiyya-shiblyகாத்தான்குடி: காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலமா சபையின் வேண்டுகோளுக்கிணங்க 78 பிளாஸ்டிக் கதிரைகள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறுக்கினால் 30.11.2016அன்று ஜம் இய்யாக்காரியாலயத்தில் வைத்து வழங்கப்பட்டன. பிரதம அதிதியாக கலந்துகொண்ட ஷிப்லி பாறுக் தனதுரையில்,

அரசியல் வாதிகள் பிழை விடும் சந்தர்ப்பத்தில் மிம்பர் மேடையை பயன்படுத்தி குறைகளை சுட்டிக்காட்டுங்கள். ஏனெனில் உங்களுக்கு கட்டுப்படவேண்டிய பொறுப்பு எமக்குள்ளது எனத்தெரிவித்ததுடன்,  என்னால்முடிந்த உதவிகளை இந்த ஜம்இய்யாவுக்கு எதிர்காலத்தில் செய்யவுள்ளேன் எனத்தெரிவித்தார்.

jammiyya-shibly

ஜம்இய்யாவின் தலைவர் மௌலவி எம் ஐ அப்துல் கையூம் ஷர்க்கியின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், செயலாளர் அஷ் ஷெய்ஹ் எம் சி எம் றிஸ்வான் மதனி, பொருளாளர் ஏ மனாப்தீன் மௌலவி, முன்னாள் நகர முதல்வர் மர்சூக் அகமட்லெவ்வை உட்பட உலமாக்கள் நிருவாக உறுப்பினர்கள் ஊடகவியலாளர்களும் கலந்து சிறப்பித்தனர்.

Published by

Leave a comment