“டான் பிரியசாத்” விடுதலையானார்

img_6330கொழும்பு: இனவாதத்தை தூண்டும் வகையில் செயற்பட்டார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த “டான் பிரியசாத்” என அழைக்கப்படும் தெமட்டகொட சுரேஷ் பிரியசாத் இன்று காலை பிணையில் விடுதலை செய்யபட்டுள்ளார்.

கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, முறைப்பாட்டாளர் சார்பில் எவ்வித ஆட்சேபனைகளும் இல்லை என ஏற்கனவே தெரிவிக்கபட்டிருந்ததால் அவர் பிணையில் விடுதலை செய்யபட்டுள்ளார்.

கொழும்பில் கடந்த 3ஆம் திகதியன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட முஸ்லிம் மக்களை தற்கொலை தாக்குதல் நடத்தியும், தீ வைத்து எரித்தும் கொலை செய்வேன் என அச்சுறுத்தல் விடுத்திருந்த டான் பிரியசாத் என அழைக்கப்படும் தெமட்டகொட சுரேஷ் பிரியசாத் கடந்த மாதம் 15 ஆம் திகதி கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment