கொழும்பு: பாராளுமன்ற உறுப்பினர்களின் காரியாலயமொன்றை பேணும் பொருட்டு அதற்கான செலவுகளுக்காக மாதாந்தம் ரூபா ஒரு இலட்சத்தினை வழங்குவதற்கு அமைச்சரவையின் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்தார்.
இன்று (30) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அது மாத்திரமன்றி பாராளுமன்ற அமர்வுகளுக்காக வழங்கப்படும் நாளாந்த கொடுப்பனவு ரூபா 500 இலிருந்து ரூபா 2,000 ஆக அதிகரிப்பதற்கும் அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாக அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்தார்.
குறித்த கொடுப்பனவுகள் யாவும் எதிர்வரும் 2017 ஜனவரி முதல் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதோடு, குறித்த யோசனை அமைச்சரவை பேச்சாளரும் பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுசன ஊடக அமைச்சருமான கயந்த கருணாதிலக்கவினால் முன்வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a comment