‘செய்குல் பலாஹ்’வின் நினைவாக கந்தூரி!!

falahகாத்தான்குடி: காத்தான்குடி ஜாமியத்துல் பலாஹ் அரபிக் கல்லூரியின் முன்னாள் அதிபர் மர்ஹூம் அப்துல்லாஹ் ஹஸ்ரத் அன்னவர்களின் பெயரில், காத்தான்குடி மத்ரஸத்துல் பலாஹ் அமைப்பினரின் ஏற்பாட்டில் கதமுல் குர்ஆன் மற்றும் அன்னதானம் நிகழ்வொன்று காத்தான்குடி முகித்தீன் தைக்கிய்யாவில் இடம்பெற்றிருக்கின்றது.

மௌலீது மற்றும் கந்தூரிகளுக்கு பகிரங்க எதிர்ப்பை வெளியிட்டிருந்த காத்தான்குடி ஜம்மிய்யத்துல் உலமாவின் கீழ் இயங்கும் இவ்வாரானதொரு அமைப்பினர் இவ் ஏற்பாட்டை செய்திருப்பது பல விமர்சனங்களை ஊரில் தோற்றுவித்துள்ளது.

இவ்விடயமாக காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலமா மற்றும் காத்தான்குடி சம்மேளனம் ஆகிய பிரதான இரு அமைப்புக்களும் மௌனம் காத்து வருகின்றன.

falah
யுவர்காத்தான்குடிக்காக இர்ஷாட் ஏ. காதர்

ஏற்கனவே கந்தூரிகளும், மௌலீதுகளும் (கதமுல் குர்ஆன் உட்பட) காத்தான்குடி ஜம்மியத்துல் உலமாவால் நிறுத்தப்பட்டிருந்ததன் பின்னர் ஹஸ்ரத் பெயரால் இடம்பெற்ற மாபெரும் கந்தூரி-அன்னதான நிகழ்வாக காத்தான்குடியில் இச்சம்பவம் நோக்கப்படுகிறது.

இதுசம்பந்தமாக மக்களிடத்தில் விழிப்பான மார்கப்பிரசாரத்தை மேற்கொள்ள வேண்டியதும், எச்சரிப்பதும் ஜம்மிய்யத்துல் உலமா மற்றும் தஃவா அமைப்புக்களின் கடமையாகும்.

இந்நிலை தொடர்ந்தால், ஹஸ்ரத்தின் மண்ணறை மீது இந்நபர்கள் சியாரம் ஒன்றை கட்டுவித்து, வழிபடவும் தயங்கமாட்டார்கள் என்பதையும் நேரகாலத்தோடு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

யுவர்காத்தான்குடிக்காக,

  • இர்ஷாட் ஏ. காதர்

Published by

Leave a comment