பிறந்த நாளன்று தனக்குரிய www.mahindarajapaksa.lk இணையத்தளத்தை வெளியிட்ட மகிந்த!

mahindaகொழும்பு: ஆட்சியை இழந்த பின்னர் துவண்டு போயிருந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த, கடந்த ஆண்டு மெல்ல மெல்ல அதில் இருந்து மீண்டுவந்திருந்தார். தொடர்ந்து அவரின் குடும்பத்தினர் கொடுத்த தன்னம்பிக்கையும், தற்போதைய அரசாங்கம் விடும் சில சிக்கல்களையும், தனக்குச் சாதகமாக மாற்றி மீண்டும் மக்களை தன் பக்கம் இழுக்கும் முழு முயற்சியில் இறங்கியிருக்கிறார் மகிந்த ராஜபக்ச.

இடையிடையே மகிந்த ராஜபக்சவின் புதல்வர்களும், சகோதரர்களும் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டாலும், அவற்றிலும் மகிந்தவிற்கு வெற்றி தான் கிடைத்துவந்தது. நாட்டு மக்களின் அனுதாபத்தை அவர் பெருக்கிக் கொண்டிருந்தார். நேற்று அவரின் 71வது பிறந்த தினத்தை பெரிய ஹேக் வெட்டிக் கொண்டாடிய அவரின் புதல்வர்கள், அவருக்காக ஒரு பாடலையும் தயார் செய்து வெளியிட்டு இன்ப அதிர்ச்சியையும் கொடுத்திருந்தனர்.

இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தன்னுடைய உத்தியோகபூர்வ இணையத்தளத்தை அங்குரார்ப்பணம் செய்து வைத்திருக்கிறார். http://www.mahindarajapaksa.lk/ என்னும் இணையத்தளத்தை பிறந்த நாளில் ஆரம்பித்து வைத்திருக்கிறார்.

அவரின் புதல்வர்கள் தந்தையை சாயவிடாமலும், நாட்டு மக்களிடத்தில் மீண்டும் மகிந்த ராஜபக்சவின் செல்வாக்கை கட்டெழுப்பவும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றனர்.

யுத்தத்தை வென்றவரை சிங்கள மக்கள் மறக்கக் கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு, இணையத்தளங்கள், சமூக ஊடகங்கள் என்று எல்லாவற்றையும் கொண்டே இன்று மீண்டும் அவர்களின் புதல்வர் தந்தையின் நாமத்தைப் பரப்பிவருகின்றனர்.

இழந்த ஆட்சியை கைப்பற்றும் முயற்சியில் மீண்டும் ராஜபக்ச குடும்பம் ஈடுபட்டுவருகின்றது. இந்தப்பலம் அடுத்தடுத்த நகர்வுகளுக்குச் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

பிறந்த நாளிலேயே புதல்வர்கள், சகோதரர்கள், ஆதரவாளர்கள் என்று வாழ்த்து மழையில் நனைந்து கொண்டிருக்கின்றார் முன்னாள் ஜனாதிபதி.

Published by

Leave a comment