கொழும்பு: நாட்டில் தற்பொழுது ஏற்பட்டிருக்கும் சிறு அச்ச சூழலில், வட்ஸ்அப் குரூப் மூலமாக கடுமையான வதந்திகள் காட்டுத் தீ போல் பரவப்படுகின்றன. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருப்பதையும் அவதானிக்க முடிகிறது. நாட்டில் குழப்பத்தைத் துண்டிவிட்டோர் என்ற அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ள டொன் பிரசாத் மற்றும் அப்துர் ராசிக் ஆகியோரின் விடுதலைக்காக அந்தந்த அமைப்புக்கள் கூட்டங்கள் கூடி, விடுதலைக்காக முயற்சித்து வருகின்றன.
இதற்கிடையில், இலங்கையின் முக்கிய சில ஊர்களைக் குறிப்பிட்டு, அங்கு சிங்களக் குழுவொன்று படையெடுத்து வருவதாகவும், மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் எனவும், குறிப்பாக பெண்கள் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் வதந்திகள் பரவி வருகின்றன.
இவ்விடயத்தில் மக்கள அவதானமாக இருக்கவும்.
Published by

Leave a comment