லண்டன்: நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்ப் தங்கள் ஊரை சேர்ந்தவர் எனவும் அவரது உண்மையான பெயர் தாவூத் இப்ராஹிம் கான் எனவும் பாகிஸ்தான் ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவில் உள்ள பாகிஸ்தானியர்களின் எதிரியாக பார்க்கப்படும் டொனால்ட் டிரம்ப் தங்கள் ஊரை சேர்ந்தவர் என நியோ நியூஸ் என்ற தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
அதில், பாகிஸ்தானில் பிறந்த டிரம்ப் குழந்தையாக இருந்தபோது அவரது உண்மையான பெற்றோர் 1954 ஆம் ஆண்டு ஒரு வீதி விபத்தில் இறந்துள்ளனர். பின்னர் டிரம்பை புதிய பெற்றோர்கள் தத்தெடுத்ததாகவும் அதற்கு ஆதாரமாக சிறிய வயது புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
இவ்விடயம் இந்த நூற்றாண்டுக்கான சிறந்த ஜோக்காக உலகளவில் பேசப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Leave a comment