அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல்: ஹிலாரி 47%, ட்ரம்ப் 43%

clinton-trump-6– இனியவன்

வோஷிங்டன் DC: இன்று நவம்பர் 8ம் திகதி உலகின் கவனத்தைத் திசைதிருப்பியிருக்கும் அமெரிக்காவின் 45வது ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் இடம்பெறுகிறது. ஒரு வருடங்களுக்குள் அமெரிக்கர்களை மாத்திரமல்ல, முழு உலகையும் தனது பேச்சால் கவர்ந்திழுத்துள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ‘புன்னகை அரசி’ ஹிலாரி ஹிலிண்டன் ஆகியோருக்கிடையில் பலத்த போட்டிகள் 50 மாநிலங்களிலும் இடம்பெற்று வருகின்றன.

அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஊடகங்களின் கருத்துக் கணிப்பின்படி ஹிலாரிக்கு 47 வீதமான வாக்குகளும், ட்ரம்பிற்கு 43 வீதமான வாக்குகளும் அளிக்கப்படும் எனவும் எதிர்வு கூறப்பட்டிருக்கின்றன. இதைவிட ஹிலாரி கிளிண்டன் வெற்றிபெறுவதற்கு 84 வீதமான வாய்ப்புக்கள் இருப்பதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்திருக்கின்றன.

மீதி 10 வீதமான வாக்குகள் செல்லுபடியற்ற வாக்குகள் மற்றும் தலம்பல் நிலையானவை எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

clinton-trump-6

Published by

Leave a comment