மகிந்த அணிக்குள் பிளவு

pavithra-wanniarachchiகொழும்பு: தற்போது கூட்டு எதிர்க்கட்சியின் பெரும்பான்மையினர் பசில் எதிர்ப்பு கொள்கையை பின்பற்றி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த எதிர்ப்பிற்கு முன்னணியில் இருப்பது மஹிந்தானந்த அலுத்கமகே என தெரிவிக்கப்படுகின்றது. அவருக்கு ஆதரவாக வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவன்ச, பவித்ரா வன்னியாராச்சி போன்ற உறுப்பினர்கள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கமை எதிர்வரும் நாட்களில் கூட்டு எதிர்க்கட்சி பாரிய பிளவு ஒன்று ஏற்படக்கூடிய அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளன.

சமகால அரசாங்கத்திற்கு எதிராக புதிய கட்சி உருவாக்கத்திற்கு எதிராக மஹிந்த தரப்பினர் கடும் எதிர்ப்பினை வெளியிடுவதாக தன்னிடம் கூறியதாக, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான J செனவிரத்ன நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

Published by

Leave a comment