கொழும்பு: அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் பிரதி தலைவரும், பேருவளை ஜாமியா நழீமியா கலாபீட பிரதி தலைவரும் இலங்கை ஜமாத்தே இஸ்லாமியின் முக்கியஸ்தருமான அஷ்ஷேஹ் .A.C.அகார் முஹம்மத் அவர்கள் பயணித்த கார் கெலிஓய பகுதியில் விபத்துக்குள்ளானதில் அவரது மனைவி காலமானார் இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
நுவரெலியாவில் நடைபெற்ற மார்க்க நிகழ்வொன்றில் கலந்துவிட்டு வீடு திரும்பும் வழியிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது!
பகலுணவுக்காக வாகனத்தை வீதியோரம் நிறுத்திவிட்டு அஷ்ஷெய்க் ஏ.சி. அகார் முகம்மத் அவர்களும் அவர்களோடு பயணித்தவர்களும் உணவகம் ஒன்றுக்குச் சென்றுள்ளனர்.
எனினும் அவரது பாரியார் மாத்திரம் காருக்குள் இருந்துள்ளார்.இந் நிலையில் பின்புறமாக வந்த லொறி ஒன்று காருடன் மோதியுள்ளது. இதனால் படுகாயமடைந்த அவர், கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

Leave a comment