கொழும்பு: ஸ்ரீபாதத்தில் உள்ள காணி ஒன்றை சவுதி அரேபிய வர்த்தகர்களுக்கு விற்பனை செய்யும் நடவடிக்கையில் பசில் ஈடுபட்டுள்ளார். இந்த விடயம் திட்டமிட்டு மறைக்கப்பட்ட போதும், தற்போது மக்கள் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் அம்பலமாகியுள்ளது. இதன் காரணமாக மஹிந்த அமைதியாகி உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளளனர்.
குறித்த ஸ்ரீபாத பிரதேசத்தில் பாரிய ஹோட்டல் ஒன்றை நிர்மாணிக்க பசில் ராஜபக்ஷ முயற்சித்த போதும் மக்களின் கடும் எதிர்ப்பு காரணமாக அந்த நடவடிக்கை நிறுத்தப்பட்டது. இறுதியில் அந்த காணியை விற்பனை செய்வதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ள முறை தொடர்பில் தற்போது ஊடகங்கள் வாயிலாக மக்கள் அறிந்து கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் மஹிந்தவின் அடுத்த அரசியல் இலக்கு வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. எனினும் தன்னை தீவிர பௌத்தனாக காட்டிக் கொள்ளும் மஹிந்த, விகாரைகளுக்கு விஜயம் செய்வதுடன் தேரர்களின் கால்களில் வீழ்ந்து சிங்கள மக்களின் நம்பிக்கையை பெற்று வருகிறார்.
சிங்களவர்களின் புனித பூமியாக மாறியுள்ள ஸ்ரீபாதவுக்குள், சவுதி வர்த்தகர்களின் பிரசன்னம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆட்சி அதிகாரத்தை பெற்றுக்கொள்ள முயற்சித்து வரும் மஹிந்தவுக்கு தற்போது பாரிய சவால் ஏற்பட்டுள்ளது. இதனை எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
அதேவேளை புதிய அரசியல் கட்சி அமைக்கும் பசிலின் உண்மை நிலைமை இவ்வாறு வெளியாகியுள்ளமையினால் அவரது அரசியல் பயணத்திற்கு பாரிய பின்னடைவொன்று ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Published by


Leave a comment