கொழும்பு: நாடாளுமன்றத்தில் நேற்று 2017ம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்ட ஒதுக்கீட்டு வரைபு சமர்ப்பிக்கப்பட்டது. இதனடிப்படையில் ஜனாதிபதியின் உத்தேசிக்கப்பட்ட செலவீனம் 6.45 பில்லியன் ரூபாவாகும். இது 645 கோடி ரூபாவுக்கும் அதிகமானதாகும். 2016 ஆம் ஜனாதிபதியின் உத்தேசிக்கப்பட்ட செலவீனம் 2.3 பில்லியனாகும். இம்முறை அது மூன்று மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய 2017ம் ஆண்டு தொடர்பில் எதிர்பார்க்கப்படும் அரசாங்க செலவு 1819.5 பில்லியன் ரூபா என தெரிவிக்கப்படுகின்றது. 2016ஆம் ஆண்டு அரசாங்க செலவு 1941.4 பில்லியன் ரூபாவாக காணப்பட்டது. இது 2016ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 21.9 பில்லியன் ரூபா குறைவென கூறப்படுகின்றது.
இந்த தரவுகளுக்கு அமைய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை விட சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செலவீனங்கள் மிகவும் அதிகமானதாகும்.
Published by

Leave a comment