இணையத்தில் பிரபலமாகி வரும் பாகிஸ்தானின் வசீகர டீ விற்பனையாளர்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு எளிமையான மார்க்கெட் ஸ்டோலில் டீ விற்பவராக வேலைபார்க்கும் , அழகிய தோற்றம் கொண்ட அர்ஷத் கான் என்பவரின் இயல்பான புகைப்படம் ஒன்று இணையத்தில் பரவி, பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இஸ்லாமாபாத்தில் தேநீரை போட்டுக்கொண்டே, தனது கவர்ச்சி மிகுந்த நீலமும் பச்சையும் கலந்த நிறம் கொண்ட கண்களை கொண்டு கேமராவை முறைப்பது போல் அந்த புகைப்படத்தில் அவர் தோன்றுகிறார்.
அவர் போடும் தேநீரை விட `சூடானவாராக இருக்கிறார்` என்றும் இந்தியா மற்றும் பாகிஸ்தானிற்கு மத்தியில் உள்ள பதற்றத்தை அவர் குறைக்க கூடும் என்றும் ட்விட்டரில் பெண்கள் பலர் நகைச்சுவையாக கருத்து வெளியிட்டுள்ளனர்.
அர்ஷத் கான்
சில பாகிஸ்தான் தொலைக்காட்சி சேனல்கள் அவரைத் தேடிப் பிடித்துள்ளன.அர்ஷத் கான் சினிமாவில் நடிக்கத் தயார் என்று கூறுகிறார். ஆனால் தன்னுடன் புகைப்படம் எடுத்துக்க்கொள்ள பலர் போஸ் கொடுப்பதால் தன் பிழைப்பு கெட்டுவிடுகிறது என்று கவலைப்பட்டுக்கொள்கிறார் அவர்.
Leave a comment