ஒன்றரை மணித்தியால மின்வெட்டுக்குக்கான காரணம்

electric power cutகொழும்பு:  இலங்கைஇலங்கை மின்சார சபையின் பிந்நிய அறிவித்தலின்படி நாளை செவ்வாய்க்கிழமை முதல் காலையில் ஒரு மணித்தியாலமும், மாலையில் அரை மணித்தியாலமும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

கொத்மலை தொடக்கம் அனுராதபுரம் வரையில் அதிக வலுவில் மின்விநியோகம் செய்யும் வடம் பழுதடைந்ததையடுத்து, அதிகூடிய கொள்ளளவுக்கு ஈடு கொடுக்க முடியாமல் நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் கருவிகள் பழுதடைந்து,

அங்கு மின் உற்பத்தி தடைபட்டுப் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது,
இந்தப் பழுதைத் திருத்துவதற்கு சில நாட்கள் எடுக்கும் என்றும் அதன் காரணமாகவே மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படுவதாக மின்சார சபை அறிவித்திருக்கின்றது.

 

Published by

Leave a comment