கொழும்பு: இலங்கையின் அடுத்த பிரதமராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பெயரிடப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கூட்டு எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவம் செய்யும் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம, ஜனாதிபதி மைத்திரியிடம் இந்த கோரிக்கை விடுத்துள்ளார்.
புலத்சிங்கள பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் உரையாற்றினார். இதன்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் ஆற்றிய சர்ச்சைக்குரிய உரை குறித்து அவர் பேசினார்.
“தற்போது அனைவரும் பார்த்துக் கொண்டிருப்பது ஜனாதிபதி கூறும் விடயங்களை தான். இன்று ஐக்கிய தேசிய கட்சியின் பிரதமர் உட்பட குழுவினரே அரசாங்கத்தை நடத்தி செல்கின்றனர். அப்படியென்றால் ஜனாதிபதிக்கு தான் இன்னமும் அனைத்து நிறைவேற்று அதிகாரங்களும் உள்ளன. இன்னமும் நிறைவேற்று அதிகாரம் நீக்கப்படவில்லை.
நிறைவேற்று அதிகாரத்தை கையில் வைத்துக் கொண்டு ஏன் அதனை பயன்படுத்துவதில்லை. அதனை பயன்படுத்தி இந்த அரசாங்கத்தை வீட்டிற்கு அனுப்பும் நடவடிக்கையினை ஜனாதிபதியினால் மேற்கொள்ள முடியும்.
அவர் ஜனாதிபதியாக இருப்பது எங்களுக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை. நாங்கள் 51 பேரும் அதற்கு எதிர்ப்பு அல்ல. எனினும் இந்த நாட்டின் பிரதமர் பதவியை மஹிந்த ராஜபக்சவுக்கு வழங்க வேண்டும் என நாங்கள் இந்த சந்தர்ப்பத்தில் கூற வேண்டும். அப்போது எங்களால் முழுமையான சுதந்திர கட்சி அரசாங்கம் ஒன்றை உருவாக்க முடியும் என குமார வெல்கம மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Published by

Leave a comment