காத்தான்குடி: மர்ஹும் ஷெய்குல் பலாஹ் மௌலவி MA. அப்துழ்ழாஹ் றஹ்மானி அவர்களுடைய ஜனாஸாவை நல்லடக்கம் செய்கின்ற இன்றையதினம் காத்தான்குடியில் வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு வெள்ளைக்கொடிகளை பறக்க விடப்பட்டுள்ள அதேநேரம் பகல் வேளையில் காத்தான்குடி பிரதான வீதி, பஸ் தரிப்பு நிலையத்திற்கு அருகாமையில் விஷேட குளிர்பானப்பந்தலொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்களின் ஆதரவுடன் தன்னார்வம்கொண்ட வாலிபர்களால் ஏற்பாடு செய்ப்பட்ட இக்குளிர்பான பந்தலில் பாதசாரிகள், பொதுமக்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் என பலருக்கும் குளிர்பானம் வழங்கப்பட்டு வருகிறது.
அதிகமான முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிம் அல்லாத பொதுமக்கள் இதில் ஆர்வத்தோடு கலந்துகொண்டிருப்பதை காணக்கூடியதாகவுள்ளது.
-
முஹம்மது நியாஸ்



Leave a comment