ஜனாதிபதி மைத்திரியின் மகனும் இப்படியா..?

daham-sirisenaகொழும்பு: கொழும்பிலுள்ள இரவு விடுதி ஒன்றில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் துரித விசாரணையை நடாத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை வழங்கியுள்ளதாக பிரதியமைச்சர் கரு பரணவிதான தெரிவித்தார். இன்று (12) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வியை அடுத்தே அவர் இதனைத் தெரிவித்தார்.

கொழும்பு, யூனியன் பிரதேசத்தில் அமைந்துள்ள குறித்த இரவு விடுதியில் சண்டை மற்றும் அடிதடி ஏற்பட்டதாகவும், அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரி தாக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டு வெளியான குறித்த செய்தியில், ஜனாதிபதியின் மகன் தஹம் சிறிசேன சம்பந்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

daham-sirisena
தஹம் சிறிசேன

குறித்த சம்பவத்திற்கும் ஜனாதிபதியின் மகன் தஹம் சிறிசேனவுக்கும் தொடர்பு உள்ளதாக தெரிவிக்கப்படுவதாக குறித்த செய்திகள் வெளியிடப்பட்டதனாலேயே ஜனாதிபதி குறித்த ஆலோசனையை வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

Published by

Leave a comment