‘செல்பி’ எடுக்க முயன்ற இரு இலங்கை மாணவிகள் ஓமானில் பலி

Omanஓமானின் – சலாலாஹ் பிரதேசத்தில் குளமொன்றிற்கு அருகில் இருந்து ‘செல்பி’ எடுக்க முயன்ற இரு இலங்கை
மாணவிகள  அதில் வீழந்து உயிரிழந்துள்ளனர். குறித்த விபத்து நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குடும்பத்துடன் சுற்றுலா சென்றிருந்த இரு  மாணவிகளும், குறித்த குளத்திற்கு அருகில் இருந்து ‘செல்பி’ எடுக்க முயற்சித்துள்ளனர். இதன் போது , ஒரு பெண் குளத்தில் விழுந்துள்ள நிலையில் , அவர் மற்றைய பெண்ணின் கையை பிடித்துள்ளதால் அவரும் குளத்தில் ஆழமான பகுதியில் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Oman

இந்நிலையில் குறித்த இருவரையும் காப்பாற்றி வைத்தியசாலையிற்கு கொண்டுசென்றுள்ளனர். எனினும் , வைத்தியசாலையில் அனுமதிக்கும் முன்னரே உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ருவானி டெல்சர மற்றும் ஸைனப் எனும் இரு மாணவிகளே பலியாகியுள்ளனர்

Published by

Leave a comment