காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி வெதகெதர பிரதான பொலிஸ் பரிசோதகராக பதவி உயர்வு

  • பழுலுல்லாஹ் பர்ஹான்

wedagethara-policeகாத்தான்குடி: காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் தற்போது நிலையப் பொறுப்பதிகாரியாக கடமையாற்றிவரும் பொலிஸ் பரிசோதகர் (ஐ.பி.) ஆரியபந்து வெதகெதர (சி.ஐ.) பிரதான பொலிஸ் பரிசோதகராக பதவி உயர்வு பெற்றுள்ளார். இவருக்கான பதவி உயர்வு நியமனக் கடிதத்தை இலங்கை பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர வழங்கியுள்ளார்.

காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகராக கடமையாற்றி பிரதான பொலிஸ் பரிசோதகராக பதவி உயர்வு பெற்றதையேடுத்து பிரதான பொலிஸ் பரிசோதகர் ஆரியபந்து வெதகெதரவுக்கு காத்தான்குடி பொலிஸ் நிலைத்திலுள்ள ஏனைய பிரிவுகளின் பொறுப்பதிகாரிகள்,ஊர் பிரமுகர்கள்,புத்திஜீவிகள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

wedagethara-police
ஆரியபந்து வெதகெதர

Published by

Leave a comment