கொழும்பு: வெளிநாட்டவர்களுக்கு காணி வழங்கும் போது விதிக்கப்படும் வரியை நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அமைச்சரவைக் கூட்டத்தின் போது இது குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டவர்களுக்கு காணி வழங்குவது குறித்த சட்ட மூலத்தில் திருத்தங்களைச் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.வெளிநாட்டவர்களுக்கு காணி வழங்கும் போது 15 வீத வரி அறவீடு செய்யப்பட்டு வந்தது.
2013ம் ஆண்டு முதல் அமுல்படுத்தப்படும் வரையில் இது தொடர்பிலான சட்ட மூலம் 2014ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிக்கும் நோக்கில் இவ்வாறு வரி அறவீட்டை ரத்து செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
Published by
Leave a comment