-
ஏ.எல். டீன்பைரூஸ்
காத்தான்குடி: காத்தான்குடி மட்/அன்வர் வித்தியாலயத்தின் சர்வதேச சிறுவர் தின நிகழ்வு (06.10.2016 வியாழன்) காத்தான்குடி கடற்கரை ஆ.ம.ஹாஜியார் தோட்ட வளாகத்தில் கல்லூரியின் அதிபர் ஏ.எல்.முனீர் அஹமட் தலைமையில் இடம் பெற்றது. நிகழ்வின் பிரதம அதிதியாக காத்தான்குடி பிரதேச கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.சீ.எம்.பதுர்தீன், பாடசாலையின் முன்னாள் அதிபர் ஐ.எல்.எம்.தாசீம், ஓய்வு பெற்ற ஆசிரியர் எம்.சீ.ஏ.அலீம், அஷ்ஷெய்ஹ் எம்.எச்.எம்.றிழ்வான் (மதனி) உட்பட பொற்றோர், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
சர்வதேச சிறுவர் தினத்தினை சிறப்பிக்கும் முகமாக பாடசாலை மாணவர்களினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த பல்வேறு நிகழ்ச்சிகள் மிகவும் சிறப்பாக இடம் பெற்றதுடன் “முஹர்ரம் புதுவருடமும், இஸ்லாம் கூறும் சிறுவர் உரிமைகளும்,கடமைகளும்” என்ற தலைப்பினில் அஷ்ஷெய்ஹ் எம்.எச்.எம்.றிழ்வான் (மதனி) அவர்களின் விசேட உரையும் இடம் பெற்றது.




Leave a comment