கொழும்பு: செய்தியைச் சரியாக வாசித்து விளங்கிக் கொள்ளாமல் அவசரப்பட்டு அறிக்கைவிடக்கூடாது. நான் சொல்லாத ஒன்றை எப்படிப் பொய் என்று கூற முடியும்.? இவ்வாறு கேள்வி எழுப்பினார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும்நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன். வடக்கு – கிழக்கு இணைப்புக்கு அஷ்ரப் ஒருபோதும் இணங்கவில்லை. தவறான தகவல்களைநாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்து வருகின்றார் என்று புனர்வாழ்வுமற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா குற்றம் சுமத்தினார்.
இதற்குப் பதிலளிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.நான் தெரிவித்த தகவல்களை, செய்தியை சரியாக வாசித்து விளங்கிக் கொள்ளாமல் அவசரப்பட்டு அறிக்கைவிடக் கூடாது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அஷ்ரப் நிபந்தனையற்ற ஆதரவு வழங்கியிருந்தார் என்று நான் எந்தவொரு இடத்திலும் சொல்லவில்லை. மேலும், முஸ்லிம் மக்களுடைய முழுச் சம்மதத்துடன் தான் இப்போதும் வடக்கு -கிழக்கு இணைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தேன்.முஸ்லிம்களுக்கான தனி அலகுக் கோரிக்கையை தமிழர் தரப்பு ஒருபோதுமே நிராகரிக்கவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மேலும் தெரிவித்தார்.
Published by

Leave a comment