கராச்சி: பாகிஸ்தானில் முக்கிய திரையரங்குகள் இந்தியப் படங்களை திரையிடப் போவதில்லை என்று முடிவெடுத்துள்ளன. இரு நாடுகளுக்கிடையே ராணுவ பதற்ற நிலை அதிகரித்ததை அடுத்து, பாகிஸ்தானின் ராணுவத்துக்கு ஆதரவாக தாங்கள் இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளதாக அவை கூறுகின்றன. லாகூர், கராச்சி மற்றும் இஸ்லாமாபாத் ஆகிய பெரு நகரங்களில் இந்தியப் படங்களுக்குத் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் தயாராகும் இந்தித் திரைப்படங்கள் பாகிஸ்தானில் பிரபலமாக உள்ளன.இந்தியத் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் பாகிஸ்தான் நடிகர்களை இந்தியப் படங்களில் பயன்படுத்தத் தடை விதித்து ஒரு நாளைக்குப் பின் இந்த நடவடிக்கை வருகிறது.
Published by


Leave a comment