கம்பி எண்ணிய கோத்தபாய

gotaகொழும்பு: அவன்கார்ட் நிறுவனத்தின் மிதக்கும் ஆயுத களஞ்சியத்திற்கு அனுமதி வழங்கியதன் மூலம் அரசாங்கத்திற்கு 11.4 பில்லியன் ரூபா நட்டம் ஏற்படுத்திய காரணத்திற்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் வழக்கு தாக்குதல் செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பான வழக்கு விசாரணை 30/09 நடைபெற்றது. இதன் போது சந்தேகநபரான கோத்தபாய ராஜபக்ச பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டது. எனினும் பிணை வழங்கப்படும் வரையில் நீதிமன்றில் கைதிகளை தடுத்து வைக்கும் கூண்டில் கோத்தபாய தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

கோத்தபாய ராஜபக்ச உட்பட குற்றவாளிகள் 8 பேர் தலா இரண்டு இலட்சம் ரொக்கப் பிணையிலும் தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணைகளிலும் விடுதலை செய்வதற்கு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய உத்தரவிட்டார். கோத்தபாய உட்பட மூவர் சுகயீனம் காரணமாக வெளிநாடு செல்வதற்கு அனுமதி கோரிய நிலையில் எதிர்வரும் 03ஆம் திகதி இதற்காக தீர்ப்பு வழங்கப்படும் என்பதாக நீதிபதி அறிவித்தார். இது தொடர்பான வழக்கு விசாரணையை எதிர்வரும் டிசம்பர் மாதம் முதலாம் திகதிக்கு ஒத்தி வைத்தார்.

gota

Published by

Leave a comment