அமெரிக்காவின் நியூ ஜெர்சி ரயில் நிலையத்தில் பயணிகள் ரயில் மோதி விபத்து

usa-trainநியுஜேர்சி: அமெரிக்காவின் நியூ ஜேர்சி மாகாணத்தில் உள்ள ஹோபோகன் ரயில் நிலையத்தில்இ ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பல பயணிகள் படுகாயம் அடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.உள்ளுர் நேரப்படி வியாழக்கிழமை காலை 8.40 மணிக்கு ஹோபோகன் ரயில் நிலையத்தில் வேகமாக வந்த பயணிகள் ரயில், கட்டுப்பாட்டை இழந்து ரயில் நிலையம் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் ரயில் நிலையம் பெரும் சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது. விபத்துக்குள்ளான ரயிலில் பலர் சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது. விபத்தின் சேதங்கள் குறித்து முழு விவரங்கள் தெரியவில்லை. ஆனால் இவ்விபத்தில் 100 பேர்வரை காயம் அடைந்து இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

usa-train

Published by

Leave a comment