-
ஏ.எல்.டீன்பைரூஸ்
காத்தான்குடி: காத்தான்குடி ஜாமியுழ்ழாபிரீன் பாலர்பாடசாலையின் விளையாட்டு விழா ஜாமியுழ்ழாபிரீன் ஜூம்ஆ பள்ளிவாயல் தலைவர் பொறியியலாளர் ஏ.எம் தௌபீக் தலைமையில் (25.09.2016 ஞாயிற்றுக்கிழமை) காத்தான்குடி மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) மைதானத்தில் இடம் பெற்றது நிகழ்வின் பிரதம அதிதியாக இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா கலந்து கொண்டார்.
பாலர் கல்லூரியில் தனக்கென ஒரு தனியான இடத்தினை பிடித்துக் கொண்ட காத்தான்குடி ஜாமியுழ்ழாபிரீன் பாலர்பாடசாலையின் விளையாட்டு விழாவின் போது அதிதிகள், பொற்றோர்கள்,பொது மக்கள் என பலரது பங்குபற்றுதலுடன் மிகவும் சிறப்பாக நடைபெற்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
சிறந்த ஆசிரியைகளின் கற்பித்தலுடன் மிகவும் சிறப்பான நிர்வாகக் கட்டமைப்புடன் இயங்கிவரும் மேற்படி பாலர் பாடசாலை பாராட்டப்பட வேண்டிய விடயமென பிரதம அதிதி கலந்து கொண்டு உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்ததுடன் இப்பாடசாலையின் மிக அத்திய அவசிய தேவைகளில் ஒன்றான கட்டிட விடயம் தொடர்பாக தலைவர் குறிப்பிட்டார் அது விடயமாக எதிர்காலத்தில் கூடிய கவனம் செலுத்தப்படும் எனவும் தனதுரையின் போது தெரிவித்தார்.
இந்நிகழ்வின் அதிதிகளாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.எம்.சுபைர், காத்தான்குடி பிரதேச கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.சீ.எம்.பதுர்தீன், ஜாமியுழ்ழாபிரீன் ஜூம்ஆ பள்ளிவாயல் உப தலைவர் ஏ.எச்.எம்.கைதுறூஸ், பாலர் பாடசாலையின் உப தலைவர் ஏ.மஹ்றூப், மீராபாலிகா அதிபர் எம்.சீ.எம்.ஏ.சத்தார், பொறியியலாளர் கே.எம்.ஏ.சமட் உட்பட பல அதிதிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்வினை எம்.ஜ.எம்.நஸீம் தொகுத்து வழங்கியதுடன் பாலர்களின் பல நிகழ்வுகள் பலரது கவனத்தையும் ஈர்த்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.



Leave a comment