காத்தான்குடி: இத்திட்டமானது கடந்த மாதம் ஆறு சகோதரிகள் இணைந்து 101 விதவைகளுக்கு வழங்கப்பட்டது. இத்திட்டத்தின் நன்மையை அறியப் பெற்றதாக லண்டனைச் சேர்ந்த ஒரு சகோதரர், தானும் இத்திட்டத்தில் இணைந்து கொள்வதாக கூறி 20 பேருக்கு ரூபா 23,100 வழங்கி வைத்தார். அதனை இன்று 20 விதவைகளுக்கு நாங்கள் வழங்கி வைக்கின்றோம். இந்த நிகழ்வானது கடந்த வருடம் ஆரம்பித்து மிகவும் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
எமது தாய்மார்கள் நோய் வாய்ப்பட்டு வீட்டிலே அவதிப்படுவதைத் தடுக்கும் முகமாகவும் அவர்கள் வைத்தியசாலையில் தங்கியிருக்கும் போது பணக்கஸ்டம், தொழில் தடைப்பாடு போன்ற சிரமங்களைத் தடுப்பதற்காக இவர்கள் வைத்திய சாலையில் தங்கியிருக்கும் ஒவ்வொரு நாளுக்கும் ரூபா. 1000 வீதம் உதாரணமாக 10 நாள் தங்கியிருந்தால் ரூபா. 10,000 நாட்களுக்கேற்ப பணம் வழங்கப்படும். அமானா தக்காபுல் நோய் நிவாரண திட்டத்தினால் வழங்கப்படும் இவ் உதவிப் பணம் அவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.
மேலும் எங்கள் தாய்மார்கள் அவர்கள் சுகையீனமாக இருக்கும் போது வைத்தியப் பரிசோதனைக்கான பணம், அவர்களுக்கு அங்கங்களில் குறைபாடு ஏற்படும் போதும், அதே போன்று மரணம் ஏற்படும் போது ரூபா ஒன்றரை இலட்சம் வரைக்கும் இவர்களுக்கு இவ் உதவித் தொகை வழங்கப்படுகின்றது. இவ்வாறான திட்டத்தின் மூலமாக சிரமப்படும் விதவைகள், சகோதரிகள் மிகவும் பிரயோசனம் அடைகின்றாரகள்.
மேலும் இந்நிகழ்வில் றுநுனுகு நிறுவனத்தின் பணிப்பாளர் சல்மா ஹம்ஸா உரையாற்றும் போது தனவந்தர்கள் இணைந்து செய்கின்ற இந்நிகழ்வானது மிகவும் வரவேற்கத்தக்கதாக அமைந்துள்ளது. மேன் மேலும் இது தொடர வேண்டும் என்பதை பலரும் வலியுறுத்துகின்றனர். ஒவ்வொரு தனவந்தர்களும் 5 பேர் 10 பேர்களுக்கு என்று வழங்கும் ஸதகாவினை நாங்கள், நோய் வாய்ப்படும் விதவை தாய்மார்களுக்கு இந்த வைத்திய உதவிக்காக வழங்கி வைக்க முடியும. நாங்கள் கிட்டத்தட்ட 500 பேருக்காவது உதவிசெய்ய நினைத்திருக்கின்றோம். தற்போது; 121 பேருக்கு வழங்கியிருக்கின்றோம. ஒரு தாய்க்கு ரூபா. 1,115 வீதம் 10 பேருக்கு ரூபா. 11,150 தேவைப்படும் இந்த அளவிற்காவது வழங்கி வைத்தாலே மிகவும் உதவியாக இருக்கும். இந்த செய்தியைப் பார்ப்பவர்கள் உங்கள் பெற்றோருக்காக, மரணித்தவர்களுக்காக இன்சா அல்லாஹ் அல்லாஹ்வுக்காக உங்களது பணம் இல்லாவிட்டாலும் மற்றொருவரிடமாவது கேட்டு வாங்கி தங்களது ஆதரவை வழங்கி வைக்குமாறு றுநுனுகு நிறுவனத்தின் பணிப்பாளர் சல்மா ஹம்ஸா கேட்டுக் கொண்டார்.
அமானா தக்காபுல் உதவியாளர் – ஐனாப் MM அனீஸ் மற்றும் மௌலவி முஸ்தபா பலாஹி ஆகியேர் உரையாற்றும் போது விதவைகளுக்காக WEDF நிறுவனத்தின் பணிப்பாளர் சல்மா ஹம்ஸா ஆற்றி வரும் இச்சேவையானது மிகவும் வரவேற்கத்தக்க விடயமாகும். இச்சேவை மென்மேலும் தொடர வேண்டும். 500 பேர் என்று அல்லாது ஊரிலுள்ள அனைத்து விதவைகளுக்கும் இவ்வாறான சேவையை வழங்கி வைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர்.
Published by


Leave a comment