கொழும்பு: ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினரான விமல் வீரவங்ச, பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவில் (FCID) சற்று முன்னர் ஆஜரானார். அரசாங்க வாகனங்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் அங்கு அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த விடயம் தொடர்பில், அவரது அண்ணனான சரத் வீரவங்ச கடந்த செப்டெம்பர் 01 ஆம் திகதி கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, அரசியல் பழிவாங்கல் காரணமாக, விமல் வீரவங்ச கைது செய்யப்படலாம் என அவரது கட்சியான தேசிய சுதந்திர முன்னணியின் ஆதரவாளர்கள் அச்சம் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Leave a comment