பெல்மடுல்ல: பெல்மடுல்ல பிரதேசத்தில் பஞ்ஞன்கொட பள்ளிவாசலுக்கு அருகில் மாடுகளை அறுத்து, இரத்தத்தை பௌத்த விகாரைக்கு அருகில் செல்வதற்கான ஏற்பாடு நேற்று பெருநாள் தினத்தன்று இடம்பெற்றிருக்கிறது. இதன்காரணமாக குறித்த பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கு ஏற்பட்ட பதற்ற நிலையினால் பொலிஸார் குறித்த இடத்திற்குவந்துள்ளதுடன், பிரதேசவாசிகள் மற்றும் குறித்த விகாரையின் தேரர் ஆகியோருக்கிடையில் கலந்துரையாடல் இடம்பெற்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் இனிமேல் மாடுகள் அறுப்பது இடம்பெறாது எனபள்ளிவாசலின் பிரதிநிதிகள் கடிதம் மூலம் உறுதியளித்துள்ளதை அடுத்து அங்கு ஏற்பபட்ட பதற்ற நிலைமை வழமைக்கு திரும்பியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Published by


Leave a comment