-
எம் எச் எம். அன்வர்
காத்தான்குடி: நாம் இவ்வுலகில் வாழ்ந்து மரணிப்பதற்கிடையில் ஏதாவது நல்ல காரியம் ஒன்றை செய்து விட்டுச் செல்வோம். இவ்வாறு (04.09.2016) இடம்பெற்ற பிரமுகர்கள் மாநாட்டின்போது இலங்கை ஜமாஅத் ஏ இஸ்லாமியின் அமீர் உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜூல் அக்பர் தெரிவித்தார். காத்தான்குடி சம்மேளன கேட்போர்கூடத்தில் “வாழ்வின் என்நிலையிலும் திக்ர் வளர்ந்ததொரு சமூகத்தின் பிக்ர்” எனும் தலைப்பில் இடம்பெற்ற நிகழ்வின்போதே இவ்வாறு தெரிவித்தார்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
காத்தான்குடி எல்லா ஊர்களுக்கும் முன்மாதிரியான ஒரு ஊராகும். நான் இதனை வரவேற்கின்றேன். அத்துடன் ஏனையவர்களுக்கு உதவுமாறு இஸ்லாம் எமக்கு கற்றுத்தந்துள்ளது. அண்மையில் நடந்த சம்பவம் ஒன்று இதற்கு உதாரணமாகும்
மகரகம புற்றநோய் வைத்தியசாலைக்கு புற்றுநோய் பரிசோதிக்கும் மெஷின் இல்லாதிருந்தது. தனவந்தர் ஒருவரின் மகனுக்கு இந்நோயினை பரிசோதிக்க முடியாமல் மிகவும் கஷ்டப்பட்டார். மெசின் இல்லாத குறையினை நிவர்த்தி செய்ய பல முயற்சிகள் செய்து சென்ற நோன்பு மாதம் 20 கோடி ரூபா பெறுமதியான அம் மெஷினை தன் பிள்ளைக்கு கிடைக்காவிட்டாலும் ஏனையவர்களுக்காவது கிடைக்க வேண்டும் என்ற நன்நோக்கில் அவ்வைத்தியசாலைக்கு அதனை கையளித்தார். இவ்வாறான முயற்சிகளை நாம் செய்ய வேண்டும்.
நல்ல எண்ணங்கள் நம்மனதில் உருவாக வேண்டும் ஏனையவர்களுக்கு உதவும் சமூகமாக மாற வேண்டும். சிறிய சிறிய நல்ல விடயங்கள் எதிர்காலத்தில் பாரிய மாற்றங்களை கொண்டுவரும்
அல்லாஹ்தஆலா ஆடு மேய்க்கும் சமூகத்தை ஆட்சி செய்யும் சமூகமாக மாற்றியது இந்த திக்ர் மற்றும் பிக்ர் அமலின் அடிப்படையிலேயாகும் எனத்தெரிவித்தார்.மேற்படி நிகழ்வுக்கு காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலமா சபை தலைவர் மௌலவி கய்யூம் ஷர்கி, பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன தலைவர் எம் எம் தௌபீக், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் யூ எல் எம் என் முபீன் மற்றும் கல்விமான்கள், தொழிலதிபர்கள் உட்பட பெருமளவானோர் கலந்துகொண்டனர்.



Leave a comment