திருகோணமலை: தங்க நகை விற்பனைக்காக பண்டாரகம பிரதேசத்தில் இருந்து திருகோணமலைக்கு ஒரு கோடி ரூபாயுடன் சென்ற வர்த்தகர் நேற்று முன்தினம் முதல் காணாமல் போயிருந்தார்.அவரைத் தேடுவதற்கு பொலிஸ் விசேட குழுக்கள் 5 நியமிக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த வர்த்தகர் யாழ்ப்பாணத்தில் இருப்பதாக பொலிஸ் தரப்பை மேற்கோள் காட்டி தகவல் வெளியாகியுள்ளது.
மொஹமட் நஸ்ரின் என்ற 35 வயதான குறித்த வர்த்தகர் காணாமல் போனதாக முறைபாடு செய்த அவரது தந்தை வர்த்தகர் உயிருடன் யாழ்ப்பாணத்தில் இருப்பதாக தெரியவந்துள்ளது. இதேவேளை நேற்றைய தினம் ஊடகங்களுக்கு முன்னால் அழுது புலம்பிய வர்த்தகரின் மனைவி நேற்று ஊடகங்களைக் கண்டதும் கதவை மூடியுள்ளதாக அங்கு சென்ற ஊடகவியலாளர்கள் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் குறித்த வர்த்தகருடன் திருகோணமலைக்கு சென்ற ஏனைய மூன்று நபர்களிடமும் பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக குறிப்பிட்டுள்ளனர்.
Published by

Leave a comment