சீனாவுக்கு கைமாறிய ஸ்ரீலங்கன்

Book-Travel-on-SriLankan-Airlines[1]கொழும்பு: ஸ்ரீலங்கன் விமான சேவையானது தனியார் நிறுவனத்திடம் கையளிப்பதன் பொருட்டு அரசானது ஹய்னேன் நிறுவனத்துடன் கலந்துரையாடுவதற்கான காரணம் இந்த நிறுவனமானது சலுகைகள், நிபந்தனைகளின் கீழ் விமான சேவையின் நிர்வாகத்தை பொறுப்பேற்பதற்கு இணங்கியமையே காரணம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஹய்னேன் நிறுவனமானது இதற்கு முதல் மத்தள விமானநிலையத்தை பொறுப்பேற்பதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் கபீர் ஹாசீம் அண்மையில் தெரிவித்திருந்ததுடன் மத்தள விமான நிலையம் மீதான அனைத்து கடன் தொகையினையும் குறித்த நிறுவனம் செலுத்துவதற்கு முன்வந்திருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இந்த நிறுவனத்தின் சிறந்த முகாமையாளரும் 1995ஆம் ஆண்டிலிருந்து இதன் பிரதான பங்கு உரிமையாளரான கோடீஸ்வர வர்த்தகர் ஜோன் சொரோஸ் ஸ்ரீலங்கா விமான சேவையை பொறுப்பேற்க பூரண விருப்பத்தை தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில்அதிகமான விமானங்களைக் கொண்ட நிறுவனங்களுள் இந்த ஹய்னேன் நிறுவனம் 5வது இடத்தில் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment