கொழும்பு துறைமுக நகரம் நிதி நகரமாக மாற்றம்!

colombo portகொழும்பு: கொழும்பு கடலை சுற்றி நிர்மாணிக்கப்படும் நிதி நகரத்தில் வெளிநாட்டு நாணயங்களை பயன்படுத்தி கொள்வனவு நடவடிக்கையில் ஈடுபட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு அமெரிக்கா டொலர்களுக்கு மேலதிகமாக ஸ்ரெலிங் பவுண்ட், ஜப்பானின் யென், இந்திய ரூபாய்கள், யூரோ உள்ளிட்ட வெளிநாட்டு பணத்தில் கொடுக்கல் வாங்கல்கள் மேற்கொள்ள இலங்கையர்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்தி கொடுப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்த பின்னர் இவ்வாறு வெளிநாட்டு பணத்தில் கொடுக்கல் வாங்கல் மேற்கொள்ள கூடிய நிதி நகரம் ஒன்று உருவாக்கும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும். கொழும்பு நிதி நகரம் உருவாகியதன் பின்னர் அதனை சுற்றி ஒரே முறையில் 88 ஆயிரம் தொழில் வாய்ப்புகள் இரண்டு வருடத்திற்குள் உருவாக்கப்படவுள்ளது.

colombo port

கொழும்பு நிதி நகரத்தினுள் அனைத்து இலங்கையர்களுக்கும் அங்கு சென்று அமெரிக்க டொலர் உட்பட எந்தவொரு வெளிநாட்டு வகையிலான பணத்தையும் பயன்படுத்தி வர்த்தகம் மேற்கொள்ள சந்தர்ப்பம் கிடைக்கும் என அரசாங்க தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

port

கொழும்பு கடலை சுற்றி நிர்மாணிக்கப்படும் இந்த நிதி நகரத்தை டுபாய் மற்றும் சிங்கப்பூருக்கு இடையில் பாரிய நிதி நகரமாக கட்டியெழுப்பப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சீனாவின் மிகப்பெரிய நிதி முதலீட்டின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட கொழும்பு துறைமுக நகரம், தற்போது நிதி நகரமாக மாற்றம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment