வர்த்தகர் மொஹமட் சுலைமான் உயிரிழந்தமைக்கான காரணம் வெளியாகியுள்ளது

sulaiman sakibகொழும்பு: கடந்த 21ஆம் திகதி பம்பலபிட்டி பகுதியை சேர்ந்த வர்த்தகரான மொஹமட் ஷாகிப் சுலைமான் (29) என்பவர் கடத்தப்பட்டு காணாமல் போயிருந்தார்.தட்டையான ஆயுதத்தினால் தலையின் பின் பகுதியில் தாக்கப்பட்டமையால், உடலினுள் இரத்தக் கசிவு ஏற்பட்டு அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அவர் கடத்தப்பட்டு ஒரு மணித்தியாலம் வரையான காலப் பகுதியில் இந்த உயிரிழப்பு ஏற்பட்டிருக்கலாம் என கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து உறவினர்கள் செய்த முறைப்பாட்டுக்கு அமைய பொலிஸார் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்.

sulaiman sakib
Sakibsulaimanyourkattankudy

இந்தநிலையில், உயிரிழந்த நபரொருவரின் சடலம், மாவனெல்ல பகுதியில் இருந்து மீட்கப்பட்டதோடு, அது காணாமல் போன வர்த்தகருடையதாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்ட நிலையில் உறுதி செய்யப்பட்டது.

Published by

Leave a comment