ஸ்டார்க் ஒருநாள் அரங்கில் புதிய சாதனை

australia starcகொழும்பு: அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் ஒருநாள் போட்டிகளில் விரைவாக 100 விக்கெட்டுக்கள் வீழ்த்தி சாதனைப் படைத்துள்ளார். அவுஸ்திரேலியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடந்த முதல் ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலியா 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அவர் 2வது விக்கெட்டாக தனன்ஜெய டி சில்வாவை ஆட்டமிழக்க வைத்த போது சர்வதேச போட்டிகளில் விரைவாக 100 விக்கெட்டுக்கள் வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.

australia starc

தற்போது ஸ்டார்க் 52 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 100 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார்.இதற்கு முன் பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் சக்லைன் முஸ்தாக் 53 போட்டிகளில் 100 விக்கெட்டுக்கள் வீழ்த்தியிருந்தார்.

Published by

Leave a comment