நாமலின் பட்டியலில் ரோசி சேனாநாயக்கவின் மகள்

roshiகொழும்பு: முன்னாள் கண்காணிப்பு உறுப்பினரான சஜித் வாஸ் குணவர்தனவின் பொறுப்பின் கீழ் பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாடு (CHOGM) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவரது தலைமையில் அதற்காக அலுவலகம் ஒன்றும் நிர்மாணிக்கப்பட்டிருந்தது. அனார்கலி தற்போது வரையில் அமெரிக்காவில் வசித்து வருகின்ற நிலையில், அவரினால் கொக்கலவில் கட்டப்பட்டுள்ள ஹோட்டலை கட்டுவதற்கு பணம் பெற்றுக் கொண்ட முறை தொடர்பில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்த ஹோட்டலை கட்டுவதற்கு அரசாங்க காணி ஒன்று பயன்படுத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்நிலையில்அந்த இடம் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவினால் வழங்கப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

roshi

அத்துடன் அனார்கலிக்கு தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமம் ஒன்றும் வழங்கப்பட்டுள்ளதாக நிதி மோசடி விசாரணை பிரிவு தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

இதேவேளை அனார்கலியின் தாயாருடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படும் வர்த்தகர் நஹில் வீரசூரிய அனார்கலி ஊடாக மேற்கொண்ட கொடுக்கல் வாங்கல் தொடர்பில் ஆராய்வதற்கு பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவு ஆயத்தமாகியுள்ளது.

இதேவேளை, ரோசி சேனாநாயக்கவின் மகள் லண்டன் பெஷன் கல்லூரியில் நவநாகரிகம் தொடர்பிலான பட்டதாரி என்பது குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment