கொழும்பு: பொலிஸ் விசேட அதிரடிப் படை கட்டளை அதிகாரியாக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் எம். ஆர். லதீப் நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் அவரிடம் வினவியபோது, சற்றுமுன்னர் அதற்கான நியமன கடிதம் தனக்கு கிடைத்ததாக எம். ஆர். லதீப் கூறினார். தனது கடமைகளை நாளை பொறுப்பேற்க உள்ளதாக அவர் கூறினார்.
பொலிஸ் விசேட அதிரடிப் படை கட்டளை அதிகாரியாக தற்போது கடமையில் இருக்கும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரஞ்சித் பெரேரா ஓய்வு பெறுவதையடுத்து பொலிஸ் ஆணைக்குழுவினால் இந்த நியமனம் பரிந்துரை செய்யப்பட்டது.
Published by


Leave a comment