அந்தநாள் ஞாபகம்-11

  • MJ

antha naal 11காத்தான்குடி: 1980களில் ஹஜ் சென்று வருவோரும், சவுதியில் தொழில் புரிவோரும் சிறுவர்களுக்கு அன்பளிப்பாக எடுத்துவரும் விளையாட்டுப் பொருட்களுள் “ரெலிவிஷன்”, “வீவ் மாஸ்டர்” எனப்படும் “புகைப்படப் பெட்டி” ஆகியவை முக்கிய பங்களிப்பு செலுத்தின.

வகை வகையான நிறங்களுடன் வந்து சேரும் இப்பொருட்களை, சிறுவர்கள் தங்களது கண்களை இப்பெட்டியின் துவாரத்தினூடாக பார்வையைச் செலுத்தி, ஹஜ் கடமை எவ்வாறு செய்யப்படுகிறது போன்ற காட்சிகளையும், மக்கா மற்றும் மதீனா நகரங்களின் புகைப்படங்களையும் பார்த்து மகிழ்வர்.

சிறுவர்கள் மட்டுமல்லாது பெரியவர்களையும் ஈர்த்துச் சென்ற இப்பொருட்களுடன், மக்கா-மதீனா மோதிரம் என அழைக்கப்படும் வர்ண நிறங்களிலான பிளாஸ்டிக் டயமண்ட் மோதிரங்களும் மறக்க முடியாதவை.

antha naal 11

சுமார் 1990 களின் ஆரம்ப காலங்கள் வரை மக்கத்து ஹாஜிமார்களின் அன்பளிப்புப் பொருட்களாக இருந்துவந்த இத்தகைய சிறுவர்களின் விளையாட்டுப் பொருட்கள், பின்னர் நாளடைவில் மறைந்துவிட்டன.

இன்று, தவளும் பிள்ளைகளில் இருந்து பெரியோர்வரை ஸ்மார்ட் ஃபோனை எதிர்பார்க்கும் இக்காலங்களில், அன்றைய இப்பொருட்களை நினைக்கையில் “அந்தநாள் ஞாபகம்” எம்மைத் தொட்டுச் செல்கிறதுMJ.

Published by

Leave a comment