ரியோ: ரியோ ஒலிம்பிக்கில் யாரும் எதிர்பாராத விதமாக சீன வீரர் ஒருவர், சக வீரரும் தனது தோழியுமான பெண்ணிடம் திருமணத்திற்கான சம்மதத்தைக் கேட்டது சீன ஊடங்களில் ஒலிம்பிக் விளையாட்டைக் காட்டிலும் அதிக கவனத்தைப் பெற்றுள்ளது.ஞாயிறன்று பெண்களுக்கான மூன்று மீட்டர் வளையும் மேடையிலிருந்து நீரில் தலைகீழாக குதிக்கும் போட்டியில் சீன வீரர் ஹெ ட்ஸீ வெள்ளிப்பதக்கத்தை வென்ற சில மணி நேரங்களில் அவரின் ஆண் நண்பர் மற்றும் சக நீரில் குதிக்கும் வீரரான ஷின் கா மேடைக்கு வந்து அவரை நெருங்கினார்.
மில்லியன் கணக்கில் கூடியிருந்த பார்வையாளர்களுக்கு மத்தியில் மண்டியிட்டு, அவரின் முன் மோதிரம் ஒன்றை நீட்டினார்.
Published by



Leave a comment