கல்முனையில் நீர் சேகரிப்பு மற்றும் நீர் உந்தும் நிலையம் திறந்து வைப்பு

  • ஹாசிப் யாஸீன், அகமட் எஸ். முகைதீன்

hakeem hareesகல்முனை: கல்முனையில் அமைக்கப்பட்ட நீர் சேகரிப்பு மற்றும் நீர் உந்தும் நிலையத்தினை திறந்து வைக்கும் நிகழ்வு சனிக்கிழமை (13) இடம்பெற்றது. நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் கிழக்குப் பிராந்திய பொது முகாமையாளர் பொறியாளாலர் எம்.ஏ.ரஷீத் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவரும், நகர திட்டமிடல், நீர்வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்து கொண்டு திறந்து வைத்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும், விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் கௌரவ அதிதியாக கலந்து கொண்டார்.

hakeem harees

இதில் மாகாண சபை உறுப்பினர்களான ஆரிப் சம்சுதீன், ஏ.எல். தவம், அப்துல் ரஸ்ஸாக் ஜவாத், முன்னாள் கல்முனை மாநகர பிரதி முதல்வரும் கட்சியின் சிரேஷ்ட பிரதித் தலைவருமான ஏ.எல்.ஏ. மஜீத், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதன்மூலம் சம்மாந்துறை, மாவடிப்பள்ளி, சாய்ந்தமருது, கல்முனை, நற்பிட்டிமுனை, துறைநீலாவணை, கல்லாறு, சோனைக்குடியிருப்பு, மணற்சேனை. பாண்டிருப்பு, மருதமுனை, பெரியநீலாவணை போன்ற பிரதேசங்களிலுள்ள சுமார் 76,276 குடும்பங்கள் சீராக குடிநீரை பெறுவதன் மூலம் நன்மையடையவுள்ளனர்.

Published by

Leave a comment