இலங்கையிலிருந்து வந்த இஸ்ரேல் பெண்ணிடம் இருக்கும் குழந்தை யாருடையது?

israel nakashடெல் அவிவ்: இலங்கையிலிருந்து ஒரு வயதுக் குழந்தையுடன் நாடு திரும்பியுள்ள இஸ்ரேல் பெண்ணொருவரிடம் இருந்த குழந்தை யாருடையது பற்றிய கேள்வி எழுந்துள்ளதால், அவர், டெல் அவிவ் விமான நிலையத்தில் சனிக்கிழமை முதல் தங்க வைக்கப்பட்டுள்ளார். 49 வயதான கெலிட் நாகாஷ் வைத்திருக்கும் குழந்தை அவருடைய பௌதீக ரீதியான குழந்தை தானா என்பதை அறிய டிஎன்எ சோதனை நடத்தப்படும்.

சோதனை எதிராக அமையுமானால், அந்த குழந்தை இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படும் என்று இஸ்ரேல் அரசு கூறியிருக்கிறது. இலங்கையை விட்டு வருவதற்கு இன்னொரு குழந்தையின் கடவுச்சீட்டை பயன்படுத்தி இருப்பதை விமான நிலைய அதிகாரிகள் கண்டறிந்தபோது நாகாஷ் தடுத்து நிறுத்தப்பட்டார். வர்த்தகப் பயணத்தின்போது அவர் இலங்கையில் குழந்தையை பெற்றெடுத்ததாகவும், ஆனால் குழந்தைக்காக அவர் அளித்த விசா விண்ணப்பம் மறுக்கப்பட்டதாகவும் நாகாஷ் தெரிவித்திருக்கிறார்.

israel nakash
கெலிட் நாகாஷ்/yourkattankudy

Published by

Leave a comment