காத்தான்குடி பாவா ஒழுங்கை புனரமைப்பு

  • M.T. ஹைதர் அலி

shibly niyazeeகாத்தான்குடி: காத்தான்குடி பிரதேசத்தில் அமையப்பெற்றுள்ள பாவா ஒழுங்கையினை புனரமைப்பு செய்வதற்காக கிராமத்திற்கு ஒரு வேலை திட்டத்தின் கீழ் அவ்ஒழுங்கை உள்வாங்கப்பட்டு ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டு வருகின்றன. இவ்ஒழுங்கையானது பல வருட காலமாக புனரமைக்கப்படாமல் குன்றும் குழியுமாக கற்கள் நிறைந்து காணப்படுகின்றது. மழை காலங்களில் மழை நீர் தேங்கி நிற்பதன் காரணமாக அப்பகுதி மக்களும் அவ்ஒழுங்கையினை பயன்படுத்துகின்றவர்களும் பல்வேறு இடர்களுக்கும், அசௌகரியங்களுக்கும் முகம்கொடுத்து வருகின்றனர்.

இவ்ஒழுங்கையினை புனரமைப்பு செய்து தருமாறு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக்கிடம் பொதுமக்கள் விடுத்த வேண்டுகோளினை அடுத்து மக்கள் பங்களிப்புடன் இவ்ஒழுங்கையினை புனரமைக்க கிராமத்திற்கு ஒரு வேலை திட்டத்தின் கீழ் இவ்ஒழுங்கையானது உள்வாங்கப்பட்டுள்ளது.

shibly niyazee

இத்திட்டம் அமுல்படுத்துவதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் மோற்கொள்ளப்பட்டு வருவதோடு, இத்திட்டத்திற்காக பத்து லட்சம் ரூபாய் நிதியொதிக்கீடு செய்யப்பட்டு கொங்ரீட் வீதி இடப்பட இருக்கின்றது.

bawa lane

இவ்ஒழுங்கையானது சிறந்த முறையில் நீர் தேங்கி நிற்காமல் வடிந்தோடக்கூடிய முறையிலும் சிறந்த தரமுள்ள கொங்ரீட் கலவைகள் இடப்பட்டு இவ்ஒழுங்கை அமைக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையிலும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் காத்தான்குடி நகர சபையின் தொழிநுட்ப உத்தியோகத்தர்களுடன் உரிய இடத்திற்கு களவிஜயமொன்றினை மேற்கொண்டார்.

இதன்போது இவ்ஒழுங்கையினுடைய நிலைமைகளை எடுத்துரைத்து, அதற்கான ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் வழங்கினார்.

 

Published by

Leave a comment