கொழும்பு: கடந்த காலங்களில் ஜனாதிபதியாக பதவி வகித்த மஹிந்த தற்போது சாதாரண பாராளுமன்ற உறுப்பினராகவே பதவி வகிக்கின்றார். அரசியல் யாப்பின்படி அதி உயர் பதவியை வகித்த ஒருவர் கீழ்நிலை பதவிக்கு தள்ளப்படும் போது, அவர் வகித்த அதி உயர் பதவிகளின் வரப்பிரசாதங்களும் சேர்ந்தே இழக்கப்படும் என்பதே உண்மை. ஜனாதிபதி பதவியினை இழந்த பின்னரும் விமானப் பயணங்களை மேற்கொள்ளும் போது தன்னை ஓர் ஜனாதிபதியாக பாவனை செய்துகொள்ளும் மஹிந்தவிற்கு வெளிநாடுகள் உயர்ந்த வரவேற்பினையே கொடுக்கின்றது.
இது அண்மைகால மஹிந்தவின் வெளிநாட்டு விஜயங்களில் மூலம் தெளிவுபடுத்தப்படுகின்றது.இவ்விடயத்தில் வெளிநாடுகளின் பங்களிப்பு என்ன? இலங்கையுடன் நட்புறவை மேற்கொண்டுள்ள ஜப்பான் அண்மையில் மஹிந்தவிற்கு கொடுத்த வரவேற்பும் கேள்வினையே ஏற்படுத்துகின்றது.
Published by


Leave a comment